
சென்னை: இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகன விற்பனையில் ஏற்பட்ட பெரும் சரிவிலிருந்து மீளும்பொருட்டு, ஊழியர் குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த நெருக்கடி குறுகிய நாட்களுக்குள் சரியாகி விடுவதற்கான அறிகுறிகள் தென்படாததால், வரும் நாட்களில் இத்துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியுள்ள எஃப்ஏடிஏ(ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன், பல விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
எனவே, இந்த நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் அரசு உடனே தலையிட்டு, கடுமையாக சுமத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. கடுமையான ஆட்குறைப்பு நடவடிக்கை கடந்த மே மாதம் துவங்கி, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களிலும் தொடர்ந்தது.
தற்போதைய நிலையில், விற்பனைப் பிரிவு பணியாளர்கள் மட்டுமே அதிகளவில் வேலையை இழந்துள்ளனர். ஆனால், நிலைமை இப்படியே தொடரும்பட்சத்தில், தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]