புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், நேரு ஆகியோரை நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்த நிலையில் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.