பாரத்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர்  பலியானார்கள்.  28 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் திருமண மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 23 பேர் பலியாயினார்கள்.  இவர்களில் 11 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள் மற்றும் பேர் 4 குழந்தைகள்.  மேலும் படுகாயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டார்கள்.

விபத்துக்குள்ளான கட்டிடம் மிக பழமையாநது என்றும் பலத்த காற்றின் காரணமாக இந்த விபத்து நிகழ்த்திருக்க வாய்ப்புள்ளதாகவும்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.