ஜெனிவா:
3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பு சோதனையில் 70-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உள்ளன. இந்நிலையில் மூன்று தடுப்பூசிகள் ஏற்கனவே மனிதர்கள் மீது சோதனை செய்து பார்கக்பட்டு விட்டது என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் மருத்துவ துறையில் சிறந்தாக விளங்கி வரும் கேன்சினோ பயோலாஜிக்ஸ் இன்க் மற்றும் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி ஆகிய மருத்துவமனைகளால் இந்த தடுப்பூசிகள் உருவாக்கபட்டது. இந்த தடுப்பூசியை இரண்டாம் கட்ட கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்ட்டது. இதுமட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த இரண்டு மருந்து தயாரிப்பாளர்களான மாடர்னா இன்க், இன்னோவியோ பார்மாசூட்டிகல்ஸ் இன்க் நிறுவனங்களும, இதற்கான சிகிச்சை முறைகளை தனித்தனியாக உருவாக்கியிருந்தன.

தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சிகள் முன்பு எப்போதுமில்லாத அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தொற்று நோய்க்கிருமி கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே நோய்களை கட்டுபடுத்திட முடியாது.

இதுமட்டுமின்றி, தடுப்பூசி உருவாக்கி, சந்தைக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கும் நேரத்தை குறைக்கவும் இந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பொதுவாக ஒரு தடுப்பூசி சந்தைக்கு வர சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெரிய மற்றும் சிறிய மருந்து தயாரிப்பாளர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் வழிநடத்துதலின் படி, ஃபைசர் இன்க் மற்றும் சனோஃபி போன்ற மருந்து நிறுவனங்களான தடுப்பூசி தயாரிப்பில் முன்னிலை பெற்றுள்ளன.

இந்நிலையில் , கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சிக் குழு விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “எங்களின் குழு கண்டுபிடிக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக அமையும், அதில் தனக்கு 80 சதவீதம் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். நிச்சயம் இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என நம்புகிறேன் அதோடு அடுத்த இரண்டு வாரங்கள் இந்த ஊசியை மனிதர்கள் மீது சோதனை செய்ய முடிவெடுத்துள்ளோம்” எனக் கூறினார்.