ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

Must read

ஐதராபாத்:
ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் தில்சுக்நகரில் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரியில் கோனார்க், வெங்கடதிரி சினிமா தியேட்டர்களில் குண்டு வெடித்தது. இதில் 18 பேர் பலியாயினர். 130 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தேசிய புலானாய்வு கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாஷின் பதக்கல் உள்பட 5 பேர் குற்றவாளிகள் என கோர்ட் ஏற்கனவே தீர்ப்பளித்தது. தண்டனை குறித்த தீர்ப்பு இன்று வெளியானது.

 
இந்திய முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாஷின் பதக்கல் மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேந்ர்த ஷியா உர் ரஹ்மான் மற்றும் 5 பேருக்கு மரணதண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
 
5 convicted in Hyderabad twin bomb blast case. To face the gallows.  Yasin Bhatkal among the three convicted.

More articles

Latest article