மும்பை: மும்பையில் முன் களப்பணியாளர்கள் பயணிக்க சிவப்பு, பச்சை மஞ்சள் நிறங்களில் பாஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாட்டுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக போலீசார் ஒரு முக்கிய  முடிவை எடுத்துள்ளனர். தனியார் வாகனங்களுக்கு 3 வண்ண குறியீடுகளின் ஸ்டிக்கர்களை கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் இயக்க முடியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை காரணமாக மும்பை காவல்துறை இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது. சிவப்பு , பச்சை, மஞ்சள் வண்ண குறியீடுகளைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே மும்பையில் அனுமதிக்கப்படும். இந்த 3 வண்ணக் குறியீடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.

வண்ணக் குறியீடுகள் தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது அவசர சேவை வாகனங்களில் மஞ்சள் வண்ண குறியீட்டையும், மருத்துவ சேவைகளை வழங்கும் வாகனங்களில் சிவப்பு வண்ண குறியீட்டையும், காய்கறி வாகனங்களுக்கு பச்சை வண்ண குறியீட்டையும் வழங்கப்பட்டு உள்ளது. வண்ணக் குறியீட்டை தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]