இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 3 பேருந்துகள் எரிந்து சாம்பலானது.
டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பில் இதுவரை உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
குண்டு வெடிப்பை தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இதில் மேலும் இரண்டு பேருந்துகளில் இருந்த வெடிகுண்டுகள் செலயலிழக்க வைக்கப்பட்டது.
பாலஸ்தீன தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கக்கப்படுகிறது.
இதையடுத்து மேற்கு கரை பகுதியில் தீவிரவாத முகாம்களை அழிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.