சென்னை,

மிழக சட்டமன்றத்தில் இன்று ஒரே நாளில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

3 துறை அமைச்சர்கள் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டசபையில் கடந்த சில நாட்களாக மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன.

இந்நிலையில், சட்டசபையில் இன்று 3 தமிழக அமைச்சர்கள் காலியாக உள்ள துணவேந்தர் பதவிகளை நிரப்ப வசதியாக மசோதாக்களை தாக்கல் செய்தனர்.

சட்டசபையில் இன்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த முன் வடிவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சட்டத் திருத்த முன் வடிவை அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்தார்.

தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த முன் வடிவை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில், பல்கலைக்கழக சட்டத்தில் தேர்வு குழு உறுப்பினர்களுக்கும், துணை வேந்தருக்கும் தகுதி எதுவும் வகுக்கப்படவில்லை.

மேலும் துணை வேந்தராக நியமிக்க அதற்கான பெயர் பட்டியலை தயாரிக்கவும், தேர்வு குழுவால் வேந்தருக்கு பரிந்துரை செய்ய கால நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது.

எனவே இதை திருத்தும் வகையில் பல்கலைகழக சட்டத்தை தகுந்த முறையில் திருத்த அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.