டெல்லி: இன்று ஒரேநாளில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிர்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட சுகோய் 30 , மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மொரேனா பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதி விழுந்து விபத்துக்குள்ளானது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்தவிபத்து தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் CDS ஜெனரல் அனில் சவுகான் மற்றும் IAF தலைமை ஏர் சீஃப் மார்ஷல் VR சவுதாரி ஆகியோருடன் தொடர்பில் உள்ளார். அவர்களிடமிருந்து விபத்து குறித்த விவரங்களை அவர் சேகரித்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானசுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் மத்திய பிரதேச மாநிலம் மொரீனா அருகே விபத்துக்குள்ளானது. | நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இந்திய விமானப்படைக்கு உதவ உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற விமானப்படை விமான விபத்து குறித்து கூறிய பரத்பூர் டி.எஸ்.பி., ராஜ். இன்று காலை 10-10.15 மணியளவில் விமான விபத்து பற்றிய தகவல் கிடைத்தது. இங்கு வந்த பிறகு, அது ஐஏஎஃப் போர் விமானம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இடிபாடுகள் மூலம், இது போர் விமானமா அல்லது வழக்கமான விமானமா என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. இன்னும் விமானிகள் வெளியேறினார்களா அல்லது இன்னும் உள்ளே இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்