திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான திருநங்கை தமிழகத்தின் இரண்டாவது எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி, இந்தியாவிலேயே முதல்முறையாக சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வுசெய்யப்பட்ட திருநங்கை என்ற பெயருக்கு சொந்தமானவர். உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் கடந்த 2015ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இதையடுத்து தற்போது 2வததாக  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சிவன்யா,, போலீஸ் எஸ்.ஐ.,யாக தேர்வு பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவன்யா.  இவரது பெற்றோர் செல்வவேல் வளர் தம்பதி. சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

தற்போது 31 வயதாகும் சிவன்யா பி.காம். பட்டதாரி. திருவண்ணாமலையில் தனியார் போலீஸ் பயிற்சி மையத்தில் சிவன்யா படித்துபோலீஸ் எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் கையால் கடந்த 26ம் தேதி பணியாணை பெற்றார்.

முன்னதாக, சிவன்யா திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் தன்னார்வலராக பணியாற்றி வந்தவர், காவலர் தேர்வுக்காக அந்த பணியை விட்டுவிட்டு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து விடாமுயற்சியுடன் தேர்வுக்குத் தயாராகி வெற்றி பெற்றவர். போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது கனவு. தற்போது நிறைவேறி சிவன்யா தெரிவித்துள்ளார்.