புதுடெல்லி:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு நாளை தொடங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய விஷ்யங்கள் தொடபான காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, விலைவாசி உயர்வு, உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.