டில்லி:
2ஜி, ஏர்செல் மாக்சிஸ் மற்றும் அலைக்கற்றை தொடர்பான வழக்குகளை 6 மாதத்திற்குள் முடிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோட்டு கெடு விதித்து உள்ளது.
அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞராக ஆனந்த் குரோவர் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக வேறு வழக்கறிஞரை நியமிக்க விரும்புவதாக மத்திய அரசு தெரிவித்ததை தொடர்ந்து, கூடுதல் சோலிட்டர் ஜெனரல் துஷார் மேஹத் என்பவரை நியமிக்க பரிந்துரைத்தது.
இந்நிலையில் இதுகுறித்த இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம்,
ஏர் மேக்சிஸ் உள்பட 2ஜி முறைகேடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் தொடர்பாக தற்போதைய நிலவரப்படி தன்னிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.
மேலும், அலைக்கற்றை முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் இன்னும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கெடு விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.