2 ஜி வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு! ஓ.பி.சைனி

Must read

சென்னை,

டந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் விசாரணை முடி வடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு தேதி குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மகள் கனிமொழி எம்.பி.  மற்றும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோர் மீதான  2 ஜி வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு 2 ஜி அலக்கற்றை ஒதுக்கீடு 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும் என்று முன்னர் நீதிபதி அறிவித்திருந்தார். ஆனால், பின்னர் தீர்ப்பு  வழங்கப்படாமல் மேலும் 15 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுவதாக அறிவித்தார். இந்நிலை யில்  செப்டம்பர் 20ல் (இன்று)  அறிவிக்கப்படும் என்று டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார்.

கடந்த 2007-ல், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த அலைகற்றை ஓதுக்கீடு காரணமாக, அரசுக்கு  1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு  வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி  தெரிவித்தது.  அதைத்தொடர்ந்து கடந்த  2009-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் காரணமாக திமுகவை சேர்ந்த அமைச்சர் ஆ.ராசா  பதவியில் இருந்து விலகினார்.

கடந்த 8 ஆண்டுகளுகாக நடைபெற்ற வரும்  இவ்வழக்கில், இருதரப்பு சாட்சியமும் முடிவடைந்த நிலையில், இறுதி வாதமும் நேற்று சி.பி.ஐ நீதிமன்றத்தில் முடிவடைந்தது.

இறுதி வாதத்தை சிபிஐ நீதிமன்ற  நீதிபதி ஓ.பி. சைனி முன்பு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பதிவு செய்தார். அப்போது, தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சட்டப்படி சரியானவையே என வாதிட்டார்.

இவ்வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கின் வழக்கின் தீர்ப்பு  எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தீர்ப்புக்கான தேதி இரு முறை ஒத்தி  வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஓ.பி. சைனி அறிவித்து உள்ளார்.

திமுகவினர் பரபரப்பாக எதிர்பார்க்கும் இந்த தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வருமா? அல்லது எதிர்ப்பாக வருமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More articles

Latest article