ரோம்

த்தாலி நாட்டில் கொரோனா தாக்குதலால் இதுவரை 2978 பேர் உயிர் இழந்துள்ளனர்.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் சுமார் 150க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.  இவ்வகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி நாட்டில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.   இது ஐரோப்பா மக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாலி நாட்டில் சீன தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதும் சீனர்கள் அதிக அளவில் பணி புரிவதுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.  இதுவரை இத்தாலியில் 35713 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதில் 4025 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் இத்தாலியில் கொரொனா பாதிப்பால் 475 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதனால் அங்கு மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2978  ஆகி உள்ளது.  உலக அளவில் மொத்தம் கொரோனா தாக்குதலால் இதுவரை 8944 பேர் உயிர் இழந்துள்ளனர்.