சான்பிராசிஸ்கோ: அமெரிக்காவின் பெரிய மகாணமான கலிபோர்னியாவில், வேகமாக பரவும் காட்டுத்தீயால் இதுவரை மொத்தம் 29 பேர் பலியாகியுள்ளதாகவும், பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் கடும் வெப்பம் காரணமாக மரங்கள் காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அதிகமாக வீசும் காற்றால் தீ வேகமாக பரவுகிறது. காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் வனப் பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பரவ துவங்கிய காட்டுத் தீ, இம்மாத தொடக்கம் வரை நீடித்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலைகள் அதிகமாக இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தால் 29 பேர் பலியாகியுள்ளனர. சில இடங்களில் இந்த தீ கட்டுக்குள் வராமல் அதிக சேதங்களை ஏற்படுத்துகிறது. இந்த தீ விபத்தால், மக்கள் உயிர் மட்டுமின்றி, விலங்குகள், அரிய வகை மரங்கள், மூலிகை தாவரங்கள் உள்ளிட்டவையும் பாதிக்கப்படுகின்றன. பல இடங்களில் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுத்தீ கலிபோர்னியாவின் நபா பள்ளத்தாக்கு பகுதியில் வேகமாக பரவி வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.