குவைத்:
குவைத் நாட்டில் கடந்த 2 மாதங்களில் 28 இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கில் மட்டும் விபத்து, உடல் நலக்குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் 28 பேர் இறந்துள்ளனர் என்று இந்திய தூதரகம் கடந்த 4ம் தேதி தெரிவித்தது.
இதில் டிசம்பரில் மட்டும் 20 பேர் இறந்துள்ளனர். 20 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஒரு உடல் மட்டும் பயணத்திற்கு காத்திருக்கிறது. 7 உடல்கள் அங்கேயே புதைக்கப்பட்டுவிட்டது. இதேபோல் கடந்த அக்டோபரில் மட்டும் 46 இந்தியர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
2016ம் ஆண்டு காலக்கட்டத்தில் நம்பவர், டிசம்பரில் 58 இந்தியர்கள் இறந்துள்ளனர். தீ விபத்து, மாரடைப்பு, உயரமான கட்டடங்களில் இருந்து விழுதல், உடல்நலம் பாதிப்பு போன்ற காரணங்களால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் 31 ஆயிரத்து 318 இந்தியர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். குவைத்தில் 2014ம் ஆண்டு முதல் 2 ஆயிரத்து 310 பேர் இறந்துள்ளனர். பக்ரைன், கனடா, குவைத், மலேசியா, ஓமன், கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.