சென்னை

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (22-ந்தேதி) முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்பட்ட 14 மின்சார raயில்களும், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்ட 14 மின்சார raயில்களும் என மொத்தம் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இருமார்க்கமாக, 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதிய நேர அட்டவணைபடி மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும், இருமார்க்கங்களிலும் ஏற்கனவே 228 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுவதால் 200 ரயில்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.”

என அறிவிக்கபட்டுள்ளது.