சென்னை: தமிழகத்தில் இன்று 1,542 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில், 162 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 26,08,748 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 1,542 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 34,835 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிர் இழந்துள்ளனர். அதே வேளையில் இதுவரை 25,56,116 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது மாநிலம் முழுவதும் 17,797 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,922 ஆகி உள்ளது
சென்னையில் நேற்று 162 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சேர்துது, இதுவரை 5,43,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியான நிலையில், இதுவரை 8,391 பேர் மரணம் அடைந்துள்ளனர். 208 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,33,095 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,922 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
27.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 38,72,322 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 27.08.2021 அன்று 20,309 காட்சிகள் வழங்கப்பட்டன.
மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு:
[youtube-feed feed=1]








