சென்னை
தமிழகத்தில் இன்று 26,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 32,79,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று தமிழகத்தில் 1,45,376 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,13,46,285 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 26,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 32,79,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 48 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,460 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 28,156 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 30,29,961 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 2,11,863 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று சென்னையில் 5,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 7,20,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 21 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,910 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 8,245 பேர் குணம் அடைந்து மொத்தம் 6,70,047 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 42,017 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 3,448 உடன் இரண்டாம் இடத்திலும் திருப்பூர் 1,779 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,05,023 பேர் பாதிக்கப்பட்டு 2,558 பேர் உயிர் இழந்து 2,76,005 பேர் குணம் அடைந்து தற்போது 27,460 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,21,116 பேர் பாதிக்கப்பட்டு 2,613 பேர் உயிர் இழந்து 2,02,827 பேர் குணம் அடைந்து தற்போது 15,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.