டெல்லி:
இந்தியா முழுவதும் 27,661 கொரோனா நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருவதாக இந்திய உள்துறை செயலாளர் தகவல் புனியா சலிலா தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் இரட்டிப்பாகி வரும் நிலையில், கொரோனா அறிகுறி காரணமாக தனிமைப் படுத்தப்படுதல் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புனியா சலிலா ஸ்ரீவத்சவா, “ஊரடங்கு உத்தரவு வழிமுறைகளை மாநில அரசுகள் சரியாக பின்பற்றுகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் செல்வதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. அது திருப்திகரமாக இருக்கிறது என்று கூறினார்.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 27,661 நிவாரண முகாம்களும் தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் தரப்பில் 23,924ம், தன்னார்வ அமைப்புகள் சார்பில் 3,737 நிவாரண முகாம்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் நாடு முழுவதும் 19,460 முகாம்களில் உணவு வழங்கப்படுகிறது.
அரசாங்கம் தரப்பில் 9,951, தன்னார்வ அமைப்புகள் மூலம் 9,509 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
75 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
13.6 லட்சம் தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களால் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.