தேனி:
மலையேற்றம் பயிற்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது காட்டுத்தீயில் சிக்கிய 39 பேரில் இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலை பகுதியில் மலை ஏற்ற பயிற்சியும் நடைபெற்று வருகிறது. இங்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு 39 பேர் கொண்ட குழுவினர் குரங்கணிக்கு மலை பகுதிக்கு சென்று மலையேறும் பயிற்சிக்கு சென்றதாக கூறப்படு கிறது. அவர்கள், மலையேற்ற பயிற்சியை முடித்துக்கொண்டு, வீடு திரும்பியதுபோது, வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கினர்.
இதிலிருந்த தப்பி வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர். காவல் துறையினர், பொதுமக்கள் உள்பட மீட்பு படையினரும் மலைப்பகுதிக்கு கென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர் மூலமுத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நுரை கலந்த தண்ணீரை தெளித்து தீயை அணைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், காட்டுத்தீயில் பலர் சிக்கியது குறித்து கேள்விப்பட்ட தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோ உடனடியாக தேனி பகுதிக்கு சென்று, மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 39 பேரில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மீட்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் தீக்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
9 பேர் இறந்துள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.