சம்பாரன்:
பீகார் மாநிலத்தின் சம்பாரன் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில், அந்த பேருந்தில் பயணம் செய்த 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தனர். இந்த கொடூரமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி பகுதியில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாது. இதன் காரணமாக பேருந்து கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து, பேருந்தின் டீசன் டேங்க் உடைந்து தீ பிடித்த்து. தீ மளமளவென பரவியதால், பஸ்சுக்குள் சிக்கியவர்கள் வெளிவர முடியாதநிலை ஏற்பட்டது.
இந்த கொடூர விபத்தில், அதில் பயணம் செய்த 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
தகவலறிந்து, சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குறித்து தகவல் அறிந்த முதல்வர் நிதிஷ்குமார், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபத்தையும், தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாகம் அறிவித்து உள்ளார்.