சென்னை: தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பற்றிய தகவல்களை சுகாதாரத் துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநிலத்தின் ஒட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 403 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 087 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆகையால் ஒட்டு மொத்தமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 83 ஆயிரத்து 464 ஆக இருக்கிறது. கொரோனா தாக்குதலுக்கு இன்று மட்டும் 35 பேர் பலியாகி உள்ளனர்.

[youtube-feed feed=1]