சென்னை: திமுக அரசு கொண்டுவந்துள்ள  ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 26ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்கள் வேலை பெற்றுள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவித்துஉள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படத்தி உள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம்  பாலிடெக்னிக் மாணவர்களை பல்வேறு நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு செய்து பணிகளை வழங்கி வருகிறது. இவர் களுக்கு  ஆண்டு சம்பளம் குறைந்தது 2 லட்சம் முதல் ரூத.8 லட்சம் வரை வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், ஜூன் 18, 2024 நிலவரப்படி  தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 25,888 மாணவர்கள், பல்வேறு துறைகளில் வேலை பெற்றுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் செல்லப்பிள்ளைத் திட்டம்  தமிழ்க இளைஞர் சமுயத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் லாபகரமான வேலைகளைப் பெறுவதற்கு அரசாங்கம் உதவுகிறது.  இந்த திட்டத்தின்மூலம் பல ஆயிரம் பேர் வேலை பெற்று வருகின்றனர்.   மேலும் சமீபத்திய சேர்க்கையின் மூலம் மொத்தம் 25,888 பாலிடெக்னிக் மாணவர்கள் லாபகரமான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

ஓலா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம், அமேஷான், அசோக் லைலெண்டு, போஸ்ச், கேட்டர் பில்லர், டெய்க்கின், டெல்பி, டிவிஎஸ், போர்டு, அசெஞ்சர், எச்சிஎல், எல் அன்டி உள்பட பல்வேறு பெரு மற்றும் சிறு நிறுவனங்கள் மாணவர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. அதிகபட்ச ஊதியமாக ரூ.8 லட்சத்தை நோக்கியா வழங்கியது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 58,000 மாணவர்கள் இந்த படிப்பின் இறுதி ஆண்டில் இருந்த நிலையில், இதுவரை 252 கல்லூரிகள் வேலை வாய்ப்பு இயக்கத்தில் பங்கேற்றுள்ளன.  இதன்மூலம்  கிட்டத்தட்ட 50% பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர், மீதமுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்கம் இன்னும் நடந்து கொண்டிருப்பதால் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.