லக்னோ:

உ.பி. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து தலைதூக்கி வருகிறது. இந்நிலையில், வேலை வாங்கித்தருவாக அழைத்துச்செல்லப்பட்ட இளம்பெண், ஓடும் காரிலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது குழந்தை காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டது.

இந்த கொடுமையான சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

உ.பி. மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றபிறகு, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,  உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை வேலை வாங்கித்தருவதாக அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுளளார்.

3வயது குழந்தையுடன் வேலை விசயமாக ஆர்.கே.மெகதா என்பவரை சந்திக்க சென்ற அந்த இளம்பெண் ணுக்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அவர் மயங்கியதும் அநத பெண்ணை மெகதாவும், அவருடைய நண்பரும் சேர்ந்து காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் காரில் வைத்து அந்த இளம்பெண்ணை  இருவரும் கற்பழித்துள்ளனர்.

அப்போது, அதற்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை, அந்த காமூகர்கள் இருவரும்  காரில் இருந்து சாலையில் தூக்கி வீசினர்.

சாலையில் பலத்த காயத்துடன் குழந்தை அழும் சத்தத்தை கேட்ட அருகில் இருந்த கிராம மக்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கற்பழிக்கப்பட்ட இளம்பெண்ணை முசாபர்நகரின்  சாபர் பகுதியில்  இறங்கிவிட்டு காமூகர்கள் இருவரும் சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த அந்த இளம்பெண், சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

[youtube-feed feed=1]