சென்னை: தமிழ்நாட்டில் இன்று 25வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 1600 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. நேற்று புதிதாக 61 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் இழுவதும் இதுவரை 24 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ள நிலையில் இன்று 25வது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் இதுவரை 9 கோடியே 91 லட்சத்து 7 ஆயிரத்து 546 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி போடாமல் 46 லட்சத்து 67 ஆயிரத்து 999 பேர் உள்ளதாகவும்,முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 2-வது தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 862 பேர் இருப்பதாகவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.
இன்றைய முகாமில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணயின், தடுப்பூசி இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி இன்று 25-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 12 முதல் 14 வயது உடையவர்களுக்கு 3.61 லட்சம் பேருக்கும், 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு 28.25 லட்சம் பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கம் சரியாக வழங்கப்படவில்லை.திட்டத்துக்காக வாங்கிய தங்கத்தை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இந் நிலையில், மாணவிகளுக்கு ரூ.1000 தருவதன் மூலம், தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம் என்று கூறினார்.