டெல்லி:
வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவால் ஏற்படும் பிரச்னை, 50 நாள்களுக்குப் பிறகு சரியாகி விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த கால அளவு நிறைவடைந்துவிட்டது. எனினும், ரூபாய் நே £ட்டுகள் மக்களுக்கு கிடைப்பதில் சில பிரச்னை உள்ளது.
உலக வரலாற்றில் மிகப்பெரிய எதேச்சாதிகாரமான நடவடிக்கையாக கருதப்படும் இந்த முடிவால், நாட்டில் உள்ள 130 கோடி ம க்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், பிரதமரின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துள்ளோம்.

அதன்படி, வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கட வேண்டும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் கு டும்பத்தில் உள்ள பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இணையவழி பரிவர்த்தனைகள் மீதான கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். அதேபோல், வருமான வரி, விற்பனை வரியில் சிறிய மற்றும் ந டுத்தர வியாபாரிகளுக்கு 50 சதவீத சலுகை வழங்க வேண்டும்.ரேசன் பொருள்களின் விலையை பாதியாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்