சென்னை: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 250 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா, தமிழ்நாட்டில்6, பறக்கும் படை சோதனையின் போது பிடிக்கப்படும் பணம், பொருட்களுக்கான உரிய ஆவணங்களை காட்டினால் அப்போதே திருப்பிக் கொடுக்கப்படும் என்றார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ம் தேதிவரை அவகாசம் உள்ளது. அதுவரை வரும் விண்ணப்பங் கள் பரிசீலிக்கப்பட்டு பெயர் சேர்க்கப்படும். வேட்புமனு தாக்கலன்று வாக்காளர் துணைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகே முதியோர்கள், ஊனமுற்றவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பெறுதல் நடவடிக்கை தொடங்கும்.
கடந்த தேர்தலில் நியமிக்கப்பட்ட செலவினப் பார்வையாளர்களின் எண்ணிக்கையைவிட இந்த தேர்தலில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். செலவினம் அதிகம் நடைபெறும் 108 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2 தொகுதிக்கு ஒரு செலவினப் பார்வையாளர் என்ற அளவில் நியமிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 151 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் பட வெளியீட்டுக்கு தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துவிட்டன. இப்போது, ஒரு நடிகராகவும், கட்சித் தலைவராகவும் இருப்பவர் வேட்பாளராகிவிட்டால், அவர் நடித்த சினிமாவை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டுமா? என்பது பற்றி தேர்தல் கமிஷன் முடிவு எடுத்து விளக்கம் அளிக்கும்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் பற்றி தேர்தல் பார்வையாளர் களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
பள்ளிக்கூடங்கள் தவிர மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளி லும் கீழ் தளத்தில் வாக்குச்சாவடிகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை சென்னை, கோவையில் முயற்சிக்கிறோம். அந்த குடியிருப்புகளில் 3 நாட்களுக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற நிலையிருப்பதால் சிலர் ஒப்புக்கொள்வதில்லை ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
அப்படி செய்தாலும் அந்த ஆவணங்கள் அனைத்தையும் நகலெடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நேரில் வந்து தாக்கல் செய்வது அவசியம். தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவத்தினர் ஏற்கெனவே தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
மேலும் 250 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவுள்ளனர். கூடுதலாக தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுபெறலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் இல்லை. ஒரு கம்பெனியில் 70 முதல் 90 பேர் வரை துணை ராணுவத்தினர் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
[youtube-feed feed=1]