டெல்லி: இந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்துக்காக மேலும் 25 நாடுகள் காத்திருப்பதாக மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் இதுவரை 15 நாடுகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. இப்போது மேலும் 25 நாடுகள் தடுப்பூசி மருந்துக்காக காத்திருக்கின்றன.
இது குறித்து மத்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியதாவது: இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி கோரும் நாடுகள் மூன்று வகைகளாக உள்ளன. ஒன்று, ஏழை நாடுகள், தடுப்பூசியின் விலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் நாடுகள் போன்றவை ஆகும்.
தற்போதுள்ள நிலையில், இந்தியா 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளது. இது தவிர மேலும் 25 நாடுகள், இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி பெறும் நடவடிக்கையின் பல்வேறு கட்டப் பணிகளில் உள்ளன. உலக வரைபடத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் இதன் மூலம் அதிகரித்து உள்ளது என்று அவர் கூறினார்.