டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 30 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா நிலவரம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக மேலும்  2,541 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,60,086-ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் மேலும் 30 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,22,223 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில்  1,862 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,21,341 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக குறைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 16,522 பேர் கொரோனா தொற்று காணமாக  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,64,210 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,87,71,95,781 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.