டெல்லி:
கருக்கலைப்பு சட்ட திருத்தத்துக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி, தற்போதுள்ள 20 வாரங்களை, 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் கருக்கலைப்பு தொடர்பான சட்டம் அமலில் உள்ளது. இதில் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு கர்ப்பத்தை கலைப்பதற்கான கால வரம்பு 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக உயர்த்தப்படுகிறது.
நாட்டில் முறையற்ற உறவலும், பலாத்காரத்தாலும் உருவாகும் கரு மற்றும் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாகியுள்ள கருவை கலைப்பதற்காக பலர் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி வருகின்றனர். மேலும் கரு கலைப்பதற்கான கால அவகாசம் 20 வாரம் என்பதை மேலும் உயர்த்தவும் பலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து மேற்படி நிரந்தர வழிமுறைகளை உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிட்டதுடன், இதுகுறித்து மத்திய சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் தற்போதமத்தியஅமைச்சரவை கூட்டத்தில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா, வர உள்ள பட்ஜெட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
It proposes increasing upper limit for termination of a pregnancy from 20 weeks to 24 weeks, among other amendments to the almost five-decade old abortion law in the country