சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும்  1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா 2வதுஅலை கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும், சென்னை, கோவை உள்பட சில மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் ஏறி இறங்கி வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் இதுவரை  26,53,115 பேர் கொரேனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மேலும் 27 பேர் மரணம் அடைந்துள்ளதுடன் சேர்த்து, இதுவரை  35,427 பேர் உயிர் இழந்துள்ளனர். அதேவேளையில் தொற்றின் பிடியில் இருந்து  25,99,567  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 17,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதைத தொடர்ந்து, இதுவரை சென்னையில் 5,48,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளனர்.  இதன்மூலம் இதுவரை 8,458 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 183 பேர் குணம் அடைந்து  வீடு திரும்பியதுடன், இதுவரை மொத்தம் 5,37,951 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,105 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

23.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 49,28,819 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 23.09.2021 அன்று 24,507 ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்:

[youtube-feed feed=1]