சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர், மொத்த எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னையில் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இ-பாஸ் தளர்வு காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
நேற்று மட்டும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், சென்னையில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,25,389-ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில், 1040 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,585 ஆக அதிகரித்து உள்ளது.
தற்போதைய நிலையில் , 13,223 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மட்டும் 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.இதனால், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,581 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 410 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டன. இதில், 13,316 பேர் கலந்து கொண்டனர், 1,343 பேருக்கு கொரோனா அறிகுறி அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர், மற்றவர்களுக்கு சிறு வியாதிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.
சென்னையில் 08-05-2020 முதல் 23-08-2020 வரை 36,886 காய்ச்சல் கிளினிக்குகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கிளினிக்குகளில் இதுவரை 20,15,851 பேர் கலந்து கொண்டனர், 1,17,086 அறிகுறி நோயாளிகள் COVID-19 க்கு அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.
மண்டல வாரியாக தொற்று குணமடைந்தவர்கள் விவரம்
1 திருவொற்றியூர் 3,841
2 மணலி 1,841
3 மாதவரம் 3,740
4 தண்டையார்பேட்டை 9,975
5 ராயபுரம் 11,773
6 திருவிக நகர் 8,547
7 அம்பத்தூர் 7,219
8 அண்ணா நகர் 12,585
9 தேனாம்பேட்டை 11,322
10 கோடம்பாக்கம் 12,533
11 வளசரவாக்கம் 6,539
12 ஆலந்தூர் 3,765
13 அடையாறு 8,187
14 பெருங்குடி 3,394
15 சோழிங்கநல்லூர் 2,800
16 இதர மாவட்டம் 1,524.
மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்
1 திருவொற்றியூர் 260
2 மணலி 152
3 மாதவரம் 620
4 தண்டையார்பேட்டை 780
5 ராயபுரம் 765
6 திருவிக நகர் 950
7 அம்பத்தூர் 1,404
8 அண்ணா நகர் 1,481
9 தேனாம்பேட்டை 858
10 கோடம்பாக்கம் 1,631
11 வளசரவாக்கம் 1,126
12 ஆலந்தூர் 590
13 அடையாறு 1,232
14 பெருங்குடி 567
15 சோழிங்கநல்லூர் 505
16 இதர மாவட்டம் 302 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.