டெல்லி:
இந்தியாவில் இன்று (24ந்தேதி) காலை 9 மணி நிலவரப்பட்டி கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ கவுன்சில்) தகவல் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,502 ஆக உயர்ந்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்ட தாகவும் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய நிலவரப்படி கொரோனாவில் இருந்து இதுவரை 4749 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
பலி எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது.