பாகிஸ்தானை ஒட்டியுள்ள 2,300 கி.மீ எல்லையை விரைவில் சீல்வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார்.
இதன்மூலம் மக்களின் போக்குவரத்து ஓரிரு செக்-பாயிண்டுகளுக்கு குறைக்கப்படும். இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவலை வெகுவாக குறைக்கலாம். மேலும் இந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள், லேசர் வேலிகள், ரேடார்கள் ஆகியன அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவிருக்கின்றன. மீண்டும் உரி மற்றும் பதான்கோட் சம்பவங்கள் நடைபெறானல் இருக்க தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு சின்ன இடத்தைக்கூட விட்டுவைக்கக்கூடாது என்ற நோக்கில் இது விரைவில் அமல்படுத்தப்படவிருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.