டெல்லி: தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் பண்டிகை கால சிறப்பு ரெயில்களுடன் மேலும் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிக்க மத்தியரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை, பின்னர் மத்திய மாநில அரசுகள் வழங்கிய தளர்வுகளைத் தொடர்பாக படிப்படியாக ரயில் சேவை தொடங்கி உள்ளது. இன்னும் முழுமையாக இயக்கப்படாத நிலையில், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் பல ரயில் சேவைகள் நடைபெற்ற வருகின்றன,
ஏற்கனவே பண்டிகை காலத்தில் 70-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் 23 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ராமேசுவரம்-ஓக்ஹா, நாகர்கோவில் – மும்பை, மதுரை – பிகானிர், நெல்லை- தாதர், கோவை-நிஜாமுதின் உள்பட 23 சிறப்பு ரயில்கள் மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது