ஹைதராபாத்:
தெலுங்கானாவில் நேற்று 23 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் தற்போது நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் அதிகபட்சமாக 253 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். என மாநில சுகாதாரதுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தெலுங்கானாவில் நேற்று 23 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் இதுவரை தெலங்கானாவில் 60 ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.