ண்டிகர்

மெரிக்காவில் குடியேறும் கனவுடன் சென்ற 23 பஞ்சாப் மாநில இளைஞர்கள் மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடெங்கும் வேலை இன்மை அதிகரித்து வருகிறது.  இதில் பஞ்சாப் மாநிலமும் விதிவிலக்கு இல்லை.  இந்த வேலை இன்மை காரணமாகப் பல இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பி வருகின்றனர்.  அவ்வாறு செல்பவர்களில் பலர் அமெரிக்க நாட்டுக்குச் சென்று பணிபுரிவதை ஒரு கனவாகக் கொண்டுள்ளனர்.  அவ்வாறு செல்பவர்களில் பலர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குச் செல்வது வழக்கமாக உள்ளது.

சமீபத்தில் அவ்வாறு மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்கா செல்ல முயன்ற 23 பஞ்சாபி இளைஞர்கள் மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  இது போல் மொத்தம் 311 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் மெக்சிகோவில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இது குறித்து தீப் என அழைக்கப்படும் சந்தீப் சிங், “எனது தந்தை முக்தியார் சிங் நான்கு லாரிகள் வைத்து தொழில் நடத்தி வந்தார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு கேப்டன் அமரிந்தர் சிங் ஆட்சி அமைத்த பிறகு லாரிகள் தொழிற்சங்கத்தை முடக்கியதால் தொழில் நசிந்து போய் இரு லாரிகளை விற்று விட்டார்.   என்னை அமெரிக்கா அனுப்ப அவர் ரூ.16 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார்.

ஆர்வத்துடன் கிளம்பிய நாங்கள் 23 பேரும் முதலில் ஈகுடார் சென்று அங்கிருந்து மெட்ல்லின் சென்றோம்.  அதன் பிறகு நாங்கள் 6 நாட்கள் நடந்து சென்று பனாமா காடுகளைக் கடந்தோம்.  பசி, தாகம், வேறு பல இன்னல்களை அனுபவித்து நாங்கள் கோஸ்டா ரிக்கா, நிகாரகுவா, ஹொண்டுராஸ், கோட்டமாலா ஆகியவற்றைப் பேருந்து, டாக்சி, மற்றும் படகுகள் மூலம் கடந்தோம்.  எங்களுடன் வந்த ராஜ்புராவை சேர்ந்த ஒருவரும அரியானா மாநிலம் கைதாலை சேர்ந்த இருவரும் வழியில் மரணம் அடைந்தனர்.

பஞ்சாபில் போதை மருந்துகள் மிக எளிதாகக் கிடைக்கின்றன.   ஆனால் வேலை கிடைப்பதில்லை.  நான் ராணுவத்தில் சேர விரும்பினேன்.  முடியவில்லை என்பதால் வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றேன்.  ஆனால் எங்களைப் போல் 311 பேர் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளோம்.  நாங்கள் இப்போது இறந்தவர்களுக்கு சமம் ஆகி உள்ளோம்.  நாங்கள் வாங்கிய கடன் எங்களை உயிருடன் கொல்கிறது” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Thanks : HINDUSTAN TIMES