சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கோடிக்கணக்கான பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இன்று 22வது தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. அதிக பட்சமாக சென்னையில் 1600 முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் சுமார் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி,முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோல் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.