பெங்களூரு: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 221 மெகாவாட் மின்சாரம் கர்நாடகாவுக்கு வரத் தொடங்கியுள்ளதாக அம்மாநில மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது யூனிட்டில் மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டும்போது, கர்நாடகாவுக்கு 221 மெகாவாட் மின்சாரம் தரப்பட வேண்டும் என்று மத்திய உற்பத்தி ஸ்டேஷனுடன் கர்நாடக மாநிலம் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத்தில் உள்ளது.
கடந்த சனிக்கிழமை கூடங்குளம் இரண்டாவது யூனிட் 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியுள்ளது. ஆகவே கர்நாடகாவுக்கு உரிய மின்சார சப்ளை ஆரம்பமாகிவிட்டது. இதனால் கர்நாடகாவில் கோடைக்காலத்தில் மின்சார தட்டுப்பாட்டை குறைக்க முடியும்” என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.