கலிபோர்னியா: இந்தியாவை பூர்விகமாக கொண்ட 22 வயதான இளைஞர் கலிபோர்னியாவின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
22 வயது நிரம்பிய இளைஞரான சுபம் கோயல் தகவல் தொழில்நுட்பத்துறையில் கலிபோர்னியாவில் பணியாற்றி வந்தார். கலிபோர்னியாவில் நடைபெற்ற தேர்தலின் போது மக்களிடம் சுபம் கோயல் ஆற்றிய உரை அவரை இன்று கவர்னர் பதவிக்கு உயர்த்தியுள்ளது.
ஜனநாயக ஆட்சி குறித்தும், அரசின் வெளிப்படையான உண்மை தன்மை குறித்தும் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுபம் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் கலிபோர்னியாவின் கல்வித்துறையில் உள்ள பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்த இவரின் பேச்சுக்கள் பிரச்சாரத்தின் அனல் பறந்தன.
சுபம் கோயலின் தாய் கருணா கோயல் மீரட்டை சேர்ந்தவர், தந்தை விபுல் கோயல் லக்னோவில் சொந்தமாக மென்பொருள் நிர்வனத்தை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.
சுபம் கோயல் கலிபோர்னியா பல்கலைக்கழத்தில் பொருளியல் மற்றும் சினிமா துறையில் படித்து கடந்த ஆண்டு பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து கலிபோர்னியாவின் டான்வில் பகுதியில் வசித்து வந்த கோயல் அதிபர் தேர்தலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். பிரச்சாரத்தின் போது நாட்டில் உள்ள ஊழல்களைக் களைய புதிய அடித்தளம் வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் தான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கலிபோர்னியா என்றும், வெளிப்படையான உண்மைத்தன்மை உள்ள அரசே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். எனவும் பிரச்சாரத்தின் போது தனது கருத்தை வெளிப்படையாகவே கூறினார். இளம் வயதில் கவர்னராக பெறுப்பெற்ற நிலையில் கல்வித்துறையில் பல்வேறு முன்னேற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது தனது குறிக்கோளாக கொண்டுள்ளதை சுபம் கோயல் தெரிவித்தார்.