சென்னை:

பெட்ரோல் டீசல் விலை கொரோனாவை போல நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.  தொடர்ந்து  21வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது.  சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையை விட 22 பைசாவும், டீசல் விலை 17 பைசா அதிகரித்தும் உள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை இன்று 21வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 பைசா உயர்ந்து  ரூ.83.59 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 17 பைசா உயர்ந்து  ரூ.77.61 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.38 பைசா ஆகவும், சல் விலை லிட்டருக்கு ரூ.80.40 பைசா ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லியில், கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது.

கொல்கத்தாவில்,  இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.05 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.52 பைசா ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மும்பையில்,  இன்றைய  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.14 பைசா ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.71 பைசா ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் போல, பெட்ரோல் டீசல் விலை உயர்வும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.