ராஜ்கோட்: குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத்தில் உள்ள 2 மருத்துவமனைகளில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 219 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ராஜ்கோட்டில், டிசம்பரில் 134 குழந்தைகள் இறந்தனர். அகமதாபாத் மருத்துவமனையில் அதே மாதத்தில் 85 பேர் இறந்தனர். 3 மாதங்களில், மொத்தம் 253 கைக்குழந்தைகள் இறந்தனர்.
இது மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாகும். புதிதாக பிறந்த குழந்தைகள் இறப்புகளின் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் மருத்துவமனைகளிலிருந்து வந்தவை.
ராஜ்கோட் மருத்துவமனையில் 2019ம் ஆண்டில் 1,235 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன. அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில், டிசம்பர் மாதத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்பு அதிகமாகும்.
இறப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்தவுடன், ராஜ்கோட்டைச் சேர்ந்த குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பதிலளிக்க மறுத்துவிட்டார். அதிகாரிகளின் தகவல்கள்படி, குழந்தை இறப்புக்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை, மாநிலத்தில் ஆரம்ப சுகாதார சேவைகளில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை அடங்கும் என்று கூறியிருக்கின்றனர்.