மும்பை:

ந்திய கடற்படையை சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மகாராஷ்டிரா, டெல்லி உள்பட சில மாநிலங்களில் தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக அந்த மாநிலங்களின் பெரும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் தாராவி பகுதியில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ளதால், அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,  மும்பையில் உள்ள இந்திய கடற்படையைச் சேர்ந்த மாலுமிகள் 21 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள்  அங்குள்ள   கடற்படை மருத்துவமனையில் மாலுமிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, அந்த மாலுமிகளுடன் பழகி வந்த மற்ற வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டிரேஸ் செய்யப்பட்டு  கொரோனா சோதனை நடத்தப்ப்பட்ட வருவதாக கூறப்படுகிறது.
இந்த மாலுமிகள் அனைவரும்  மும்பை  மேற்கு கடற்படை குடியிருப்பு விடுதிகளில் மாலுமிகள் தங்கியிருந்த நிலையில்,  அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வந்ததால், அவர்களுக்கு நோய் தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.