டில்லி
வரும் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை குறித்த அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கமாகும். வரும் அக்டோபர் மாதத்துக்கான விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர், 1,2,3,6,7,9.10, 12. 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 22, 23, 24, 26, 31 ஆகிய தேதிகள் வங்கி விடுமுறை தினங்கள் ஆகும். இவை ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்ப மாறுபடலாம். இந்த 21 நாட்களில் 14 நாட்கள் நேரடியாக ரிசர்வ் வங்கி தரப்பில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் பண்டிகை மாதம் என்பதால் அதிக விடுமுறைகள் விடப்பட்டுள்ளன.
இதையொட்டி வங்கி வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்கள் வங்கி சேவைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என வங்கிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கி கிளைகளில் விடுமுறை நாட்களில் ஏ டி எம் , ஆனலைன் மற்றும் மொபைல் சேவைகள் இயங்கும் என்றாலும் வங்கிக் கிளைகளில் பணம் எடுக்கவோ டிபாசிட் செய்யவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.