சென்னை:
மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று வேட்பாளர் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திமுக, அதிமுக உள்பட பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து உள்ளன. இந்த நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
வேட்பாளர் பட்டியல் விவரம்:
1. திருவள்ளூர் – லோகரங்கன்
2. சென்னை வடக்கு – ஏஜி மவுரியா
3. மத்திய சென்னை – கமீலா நாசர்
4. ஸ்ரீபெரும்பதூர் – சிவக்குமார்
5. அரக்கோணம் – ராஜேந்திரன்
6. வேலூர் – ஆர். சுரேஷ்
7. கிருஷ்ணகிரி – ஸ்ரீகாருண்யா
8. தருமபுரி – வழக்கறிஞர் ராஜசேகர்
9. விழுப்புரம் – வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி
10. சேலம் – மணிகண்டன்
11. நீலகிரி – வழக்கறிஞர் ராஜேந்திரன்
12. திண்டுக்கல் – டாக்டர் எஸ்.சுதாகர்
13. திருச்சி – வி.ஆனந்தராஜா
14. சிதம்பரம் – டி.ரவி
15. மயிலாடுதுறை – ரிபாஃயுதீன்
16. நாகை – கே.குருவையா
17. தேனி – ராதாகிருஷ்ணன்
18. தூத்துக்குடி – டி.டி.எஸ் பொன்குமரன்
19. நெல்லை – என்.வெண்ணிமலை
20. குமரி – எபிநேசர்
21. புதுச்சேரி – எம்.ஏ.எஸ் சுப்ரமணியன்
முதற்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவவரம் வரும் 24ந் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.