சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில், சென்னையில் மட்டும் 183 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 25,99,255 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கொரோனா உயிரிழப்பு 34,686 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில், 25,45,178 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 19,391 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். சென்னையில், 2120 பேர் சிகிச்சையில் உள்ளது.
சென்னையில் இன்று 183 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 54,23,78ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8375 ஆக அதிகரித்துள்ளது. இன்று 153 பேர் குணமடைந்துள்ளதுடன், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 53,18,83 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் 16
செங்கல்பட்டு 99
சென்னை 183
கோவை 205
கடலூர் 57
தர்மபுரி 21
திண்டுக்கல் 8
ஈரோடு 152
கல்லக்குறிச்சி 24
காஞ்சிபுரம் 31
கன்னியாகுமரி 25
கரூர் 13
கிருஷ்ணகிரி 20
மதுரை 14
மயிலாடுதுறை 14
நாகப்பட்டினம் 48
நாமக்கல் 50
நீலகிரி 36
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 25
ராமநாதபுரம் 3
ராணிப்பேட்டை 20
சேலம் 79
சிவகங்கை 21
தென்காசி 8
தஞ்சாவூர் 95
தேனி 5
திருப்பத்தூர் 15
திருவள்ளூர் 58
திருவண்ணாமலை 31
திருவாரூர் 39
தூத்துக்குடி 13
திருநெல்வேலி 15
திருப்பூர் 76
திருச்சி 52
வேலூர் 27
விழுப்புரம் 43
விருதுநகர் 6