லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 20,510 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,517 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் இன்னும் 1,11,835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.