சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டும் வெற்றிபெறும் நோக்கில்,   தேர்தல் வியூகங்களை வகுக்க, பிரபல தேர்தல் வியூக நிறுவனங்களில் ஒன்றான ராபின் சர்மா நிறுவனத்துடன் தி.மு.க. ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற்ற திமுக, தற்போது  2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற மற்றொரு நிறுவனமான  ராபின் சர்மாவின் நிறுவனத்துடன் தி.மு.க. ஒப்பந்தம் செய்துள்ளது.

ராபின் சர்மா நிறுவனம் சமீபத்தில், ஆந்திர மாநில தேர்தலில் சந்திரபாபு நாயுடு நிறுவனத்துக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே நிறுவனத்துக்கும் ஆதரவாக செயல்பட்டு, தேர்தல் வியூகம் வகுத்து, தேர்தலில் வெற்றிபெற செயலாற்றிய நிலையில், திமுகவும், மீண்டும் வெற்றிபெற அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் பல செயல்கள் திமுக அரசுக்கு பின்னடைவை தரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  பொதுமக்களும் திமுக அரசுமீது அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், நடிகர் விஜய், சீமான் மற்றும் பாஜக போன்ற கட்சிகளுக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கும் பெருகி வருவதால்,  மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாராளுமன்ற தேர்தலின்போது பணியாற்றிய ராபின் சர்மா நிறுவனத்தை திமுக ஒப்பந்தம்  செய்து. பிரசார வியூகம் வகுக்க உள்ளது.

 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில், தேர்தல்  பிரசார யுக்திகளை வகுக்க ராபின் சர்மாவின் SHOWTIME CONSULTANCY நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், அதிமுகவுக்காக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, திமுக வேறு நிறுவனத்தை நாடியுள்ளது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கும் மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சிக்கும், மகாராஷ்டிராவில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவிற்கும் ராபின் சர்மாவின் SHOWTIME CONSULTANCY நிறுவனம் தேர்தல் யுக்திகளை வகுத்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.