ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த ஜப்பானியர்களுக்கான சேவை அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிரான செயல்பாட்டிற்காக இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே நோபல் கமிட்டியின் தலைவரான ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ், “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான அழுத்தம்” காரணமாக இந்த விருது வழங்கப்பட்டுகிறது என்று தெரிவித்தார்.

மேலும், நோபல் கமிட்டி “உடல் துன்பங்கள் மற்றும் வலிமிகுந்த நினைவுகள் இருந்தபோதிலும், தங்கள் விலையுயர்ந்த அனுபவத்தைப் பயன்படுத்தி அமைதிக்கான நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் வளர்த்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்த அனைவரையும் கௌரவிக்க விரும்புகிறது” என்று அவர் கூறினார்.

அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தை தொடர்ந்து ஆதரித்து வரும் நோபல் கமிட்டி 1995 மற்றும் 2017ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.